» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை: ஆயர் தலைமையில் உண்ணாவிரதம்!

வியாழன் 10, ஏப்ரல் 2025 11:34:38 AM (IST)



புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. 

புனித வெள்ளி அன்று தமிழ் நாடு முழுவதும் மதுகடைகளை மூட வலியுறுத்தி பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழு சார்பில் தூத்துக்குடியில் திரு இருதய போராலயம் (சின்ன கோயில்)  வளாகத்தில் வைத்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.  அதிமுக மாநில வர்த்தக அணி செயலளார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து காெண்டு உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

இந்நிகழ்வில் முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு ரவி காலன், மறை மாவட்ட செயலாளர் ஆண்றனி ஜெகதீசன், பொருளாளர் பிரதீப், சிஇஎப்ஐ தேசிய பொதுச் செயலாளர் ஸ்டீபன், அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைத் தலைவர், ஜெயராஜ், சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ், பொதுச் செயலாளர் சாம் செல்வராஜ், துணைத் தலைவர் சாமுவேல் மோசஸ், பிஷப் கால்டுவெல் கல்லூரி முன்னாள் தாளாளர் ஜெபனேஷர் மங்களராஜ், அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ், பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, ஜெயந்தர ராஜ், செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், பெப்பின் மிஸியர் உட்பட பங்கு மக்கள், சங்கங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிApr 11, 2025 - 09:58:26 PM | Posted IP 162.1*****

அப்படியே ஈஸ்டர் அன்றும் மதுக் கடைகளை மூடினால் நல்லது.

தெரியாமல் திமுகவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தவன்Apr 10, 2025 - 01:42:57 PM | Posted IP 172.7*****

திமுக காரனை காணோம், ஒளிந்து இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory