» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனைத் தாக்கி கொலை மிரட்டல்: டிரைவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:28:56 PM (IST)
சாத்தான்குளம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுவனைத் தாக்கி பைக்கை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாராபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் ஜெயக்குமார் (42). இவரது மகன் லிங்கதுரை (16) சம்பவத்தன்று பண்டாரபுரம் கிருபாபுரம் தெருவில் லிங்கதுரை அவரது நண்பர் ஆபிரகாம் தந்தை நினைவு நாளையொட்டி வீட்டிற்கு உணவு அருந்த பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது முன் விரோதம் காரணமாக கிருபாபுரத்தில் டீக்கடை நடத்தி வரும் தானியல் மகன் ஜம்பு (40), அவரது சகோதரர்கள் கார் ஓட்டுநரான நீல்ஆம்ஸ்ட்ராங் (45), கென்னடி (61) ஆகிய 3 பேரும் லிங்கத்துரையை வழிமறித்து இங்கு எப்படி வரலாம் என்று தகராறு செய்து அவரை தாக்கினார்களாம். மறுநாள் 3 பேர்களும் லிங்கதுரை வீட்டிற்கு சென்று அங்கு நின்ற பைக்கை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் கதவை அலடிவாளால் வெட்டி லிங்கதுரையையும் அவரது தந்தை ஜெய்க்குமாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று உள்ளனர்.
இது குறித்து ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் பொறுப்பு நாககுமாரி விசாரணை நடத்தி நீல் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து மற்ற இருவரையும் தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:02:03 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை: ஆயர் தலைமையில் உண்ணாவிரதம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:34:38 AM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:24:56 AM (IST)

கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் உதவி : சுயஉதவிக்குழு மகளிருக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:22:47 AM (IST)

வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாப பலி
வியாழன் 10, ஏப்ரல் 2025 8:56:58 AM (IST)

தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)
