» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகள் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 2, ஏப்ரல் 2025 11:25:12 AM (IST)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி 19 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை 6 மணிக்கு வாக்கிங் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி முனியம்மாள் (82) மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி வீடுபுகுந்து முனியம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச்செயின், மற்றும் கைகளில் அணிந்திருந்த 4 பவுன் வளையல் என 19 பவுன் நகைகளை பறித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முனியம்மாள் கூச்சலிட்டுள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏஎஸ்பி மதன், இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
