» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு
திங்கள் 17, மார்ச் 2025 5:20:56 PM (IST)

தூத்துக்குடியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் பங்கேற்ற காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் 100 நாட்கள் காசநோய் பிரச்சாரம் மற்றும் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 நாள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சார பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மருத்துவப்பணிகள்(காசம்) சுந்தரலிங்கம், துறைத் தலைவர் (நெஞ்சக நோய் மருத்துவம்) சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, நெஞ்சக நோய் துறையின் உதவி பேராசிரியர் சந்திரிகா, உதவி உறைவிட மருத்துவ அலுவலர் கரோலின், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் சுவாச சிகிச்சையாளர் பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்ற பேரணியானது அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியை வந்தடைந்தது. பேரணியின் போது காசநோய் விழிப்புணர்வு வாசகங்கள் முழுங்கப்பட்டதுடன் 100 நாள் பிரச்சார துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் துறை மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 10 போ் கைது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
செவ்வாய் 18, மார்ச் 2025 9:23:24 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டு்ம் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகும்: மேலாண்மை இயக்குநர்
செவ்வாய் 18, மார்ச் 2025 9:17:00 AM (IST)

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை - உயா்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:11:19 AM (IST)

தூத்துக்குடியில் இளஞ்சிறாா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்: பெற்றோர் மீது வழக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:57:32 AM (IST)

மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:42:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)
