» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:42:41 AM (IST)

மேல்மாந்தை ஸ்ரீ பெத்தனாட்சியம்மன் திருக்கோவிலில் மாசிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது..
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் கடைசி வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். புகழ்பெற்ற இந்த பெத்தனாட்சி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிலஅளவை கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:49:49 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மைதானத்தில் மேயர் ஆய்வு
செவ்வாய் 18, மார்ச் 2025 12:18:59 PM (IST)

மாநகராட்சி தூய்மைப் பணியாளர் தற்கொலை!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:08:51 PM (IST)

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு பயன் என்ன? - கனிமொழி எம்.பி. கேள்வி
செவ்வாய் 18, மார்ச் 2025 11:46:12 AM (IST)

மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:14:25 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா
செவ்வாய் 18, மார்ச் 2025 10:39:04 AM (IST)
