» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா
செவ்வாய் 18, மார்ச் 2025 10:39:04 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் மாதரே 2025 முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு, முத்து மாநகரின் சாதனை பெண்களை கவுரவிக்கும் "மாதரே 2025" முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனம், பாட்டு, ரங்கோலி, மெஹந்தி, நடிப்பு, ஃபேஷன் ஷோ, பாரம்பரிய சமையல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தங்கராணி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நவஜோதினி அரிராமகிருஷ்ணன், கவுதமி நமச்சிவாயம், வழக்கறிஞர் சொர்ணலதா, டிஎஸ்எப் எம்டி பிரபா ஜோன்ஸ், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் (ஒய்வு) சுப்புலட்சுமி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ராஜ் ஹோட்டல் சுதா சுந்தர்சிங், பொறியாளர் டேபோஸ்லின் ஜெகன், வஉசி கல்லூரி பேராசிரியர் ராஜா தே.பேச்சிமுத்து ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 18க்கும் வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்து தாரகை 2025 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஃப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், டிவி, சேலைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை அன்கோ பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிரஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் பயிற்சி: டிஎம்பி பவுண்டேஷன் ஒப்பந்தம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:50:14 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 3:55:13 PM (IST)

நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:23:26 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா
செவ்வாய் 18, மார்ச் 2025 3:16:49 PM (IST)

வெம்பூர் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 3:06:29 PM (IST)

நிலஅளவை கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:49:49 PM (IST)
