» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிலஅளவை கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 12:49:49 PM (IST)
பொதுமக்கள் நிலஅளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலஉரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொதுசேவை மையங்களை அணுகி, நிலஅளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க இயலும்.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை / வரைபடம்’ நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in/ - என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
