» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா

செவ்வாய் 18, மார்ச் 2025 3:16:49 PM (IST)



கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இளம் மழலையர்களுக்கான "பட்டமளிப்பு விழா சங்கத் தலைவர் பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி, பள்ளி செயலாளர் அட்வகேட் செல்வம் முன்னிலையில் பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர் செந்தில் குமார், பொன் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் வேல்முருகன் மற்றும் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் துரை பத்மநாபன், கலந்து கொண்டு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மேலும் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் அவர்களது வளர்ச்சியில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆற்றுகின்ற பங்கினை இன்னும் சிறப்பாக செய்கின்ற போது பல்வேறு வகையான முன்னேற்றங்களை காண முடியும் என்று கூறினார். தற்போதுள்ள குழந்தைகள் எதையும் சீக்கிரமாக புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தில் இருப்பதினால் அவர்களது முன்னேற்றத்தில் எதிர்பார்க்கின்ற வளர்ச்சியைக் காண முடியும் என்றும் உடல் ஆரோக்கியத்தில் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது அதில் கவனம் வைத்து வளர்க்கின்ற பிள்ளைகள் நாம் எதிர்பார்த்ததைப் போல் வருவார்கள் என்றும் எடுத்துக்கூறினார். 

மாணவி மகாஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பட்டங்களும் வழங்கப்பட்டன. குழந்தைகளின் நடனம், பேச்சு, பாடல், மாறுவேடம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 



மாணவர்கள் கதிர் செல்வன், ஆத்விக் மற்றும் சொர்ணமலர் விழாவினை தொகுத்து வழங்கினர். பள்ளி முதல்வர் பிரபு பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாணவர்கள் கவிப்பிரியா மற்றும் வர்னேஷ்வரன் அனைவரையும் வரவேற்றனர். மாணவி தீபிகா நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை ஒருங்கினைப்பாளர்கள் அன்னலட்சுமி, ஐஸ்வர்யம், பிரியதர்ஷினி, முருகேஸ்வரி மற்றும் இரு பால் ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory