» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாநகராட்சி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 11:14:25 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் மகாராஜன் (33). இவரது மனைவி நேசமணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகராஜன் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் விபத்தில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை மகாராஜன் மனைவி நேசமணி சென்று பார்க்கவில்லையாம். இதனால் நேற்று இரவு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனையடைந்த மகாராஜன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு மகாராஜனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)

ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!
செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் குறும்பட போட்டி: ஏப்.5 வரை பதிவேற்றம் செய்யலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 5:44:41 PM (IST)

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி : எஸ்.பி.சண்முக நாதன் பேச்சு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:09:55 PM (IST)
