» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தைகளைக் காப்போம் குறும்பட போட்டி: ஏப்.5 வரை பதிவேற்றம் செய்யலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 5:44:41 PM (IST)
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டிகளில் பங்குபெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்கபவத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள், பள்ளி (ம) கல்லூரி மாணவ மாணவிகள் என எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 3 குறும்படம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது சொந்த குறும்படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்.
குறும்படத்தின் நீளம் அதிகபட்சம் 7 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் https://lnxstgweb.tn.gov.in/tuty/sfc2024/ என்ற இணையதளத்தில் 28.02.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்கள் தங்களின் குறும்படம் தொகுப்பை 14.03.2025 தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ. 25,000/- இரண்டாம் பரிசாக ரூ. 15,000/- மூன்றாம் பரிசாக ரூ.10,000/- வழங்கப்படுகின்றது.
தற்போது விண்ணப்பிப்பதற்கான நாள் முடிவுற்றதைத்தொடர்ந்து, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் குறும்பட தொகுப்பை இணையதளத்தில் 05.04.2025-க்குள் காலதாமதம் ஏதுமின்றி பதிவேற்றம் (Upload) செய்யுமாறும் குறும்படத்தின் கோப்புகளை சிடி டிரைவ் -ல் பதிவு செய்து மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0461-2337977 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அஞ்சலங்களில் பொதுசேவை மையம்: பொது மக்கள் பயன்பெற அழைப்பு
புதன் 19, மார்ச் 2025 3:46:48 PM (IST)

தூத்துக்குடி ரோச் பூங்காவவை செப்பனிட்டு பராமரிக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:40:35 PM (IST)

டாஸ்மாக் கடையில் மதுபானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : பாஜக கோரிக்கை
புதன் 19, மார்ச் 2025 3:24:03 PM (IST)

தூத்துக்குடியில் புதிய பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் : மேயர் தகவல்
புதன் 19, மார்ச் 2025 3:17:23 PM (IST)

பெட்ரோலில் எத்தனால் கூடுதலாக கலப்பதால் வாகனங்கள் பழுது: ஆய்வு நடத்த கோரிக்கை!
புதன் 19, மார்ச் 2025 3:06:01 PM (IST)

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)
