» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி : எஸ்.பி.சண்முக நாதன் பேச்சு

செவ்வாய் 18, மார்ச் 2025 5:09:55 PM (IST)



தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமையும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர் மற்றும் மன்றம் சார்பில் மூத்த ரசிகர் மற்றும் அ.தி.மு.க மூத்த முன்னோடிகளை கெளரவித்து பரிசு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கனி ஹோட்டல் மீட்டிங் ஹாலில் எம்.ஜி.ஆர் ரசிகர் திருச்செந்தூர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கே.மிக்கேல், ஆறுமுகநேரி நகர முன்னாள் செயலாளர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், நெல்லை, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் பொறுப்பாளர் மு.பாலகிருட்டிணன் ஆகியோர் மூத்த முன்னோடி எம்.ஜி.ஆர் ரசிகர் மற்றும் அ.தி.மு.கவினரை, கெளரவித்து நினைவு பரிசு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

தொடர்ந்து சைக்கிள், தையல் மிசின், அரிசி, ஆட்டோ டிரைவருக்கு பேன்ட், சட்டை, போக்குவரத்து தொழிலாளருக்கு வேட்டி, சட்டை, கட்டிட ,ஹோட்டல், தொழிலாளிக்கு சேலை, வேட்டி, நினைவு பரிசு மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் எஸ்.பி.சண்முகநாதன் பேசும்போது கூறுகையில்: இந்த விழாவை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தொடர்ந்து நடத்துகிறது. இவர்கள் எந்த பிரதிபலன் பார்க்காமல் நல்ல எண்ணத்துடன் தொடர்ந்து செய்துவருகிறது. இந்த விழாவில் நானும் எம்.ஜி.ஆர் ரசிகர்தான் உங்களுடன் பணியாற்றியவன். அந்த பெருமையுடன் விழாவில் கலந்து வருகிறேன். இன்னைக்கு நாங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் பூத் கமிட்டி பணி செய்துவந்தோம். கிராம மக்கள் திரண்டு வந்தது, புதிய எழுச்சியை ஏற்படுத்திவிட்டது. 

அண்ணா தி.மு.க. வலிமையுடன்தான் உள்ளது. மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர், அ.தி.மு.க. முன்னோடிகள் அனைவரும் ஒதுங்கி நிற்காமல், கழக பணியாற்றுங்கள். இன்று புதியகட்சி தொடங்குவர் எல்லாம் காமராஜர், எம்.ஜி.ஆர் ஆட்சி தருவோம் சொல்வர் யாரும் கருணாநிதி ஆட்சி தருவோம் சொல்லவில்லையே. தமிழகமெங்கும் எடப்பாடியார் ஆதரவு அலை வீசுகிறது. முதலமைச்சர் ஆசனத்தில் எடப்பாடியார் அமருவது உறுதி. சட்டமன்ற தேர்தலில் பணியாற்றி அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடி தாருங்கள் என கூறினார்.

இவ்விழாவில் அ.தி.மு.க. மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி மாநகர மத்திய வடக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் ஜெய்கணேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட அம்மா பேரவை முன்னாள் செயலாளர் பி.வி.தங்கமாரியப்பன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பொன்ராஜ், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் எம்.ஜி.ஆர் சண்முகம், நெப்போலியன், வீரபாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பொன்னம்பலம், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் தொப்பை கணபதி, மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் அண்ணா தொழிற்சங்க தலைவர் ஐய்யப்பன், மாணவரணி தூத்துக்குடி முன்னாள் செயலாளர் இரா.குமாரவேல் மற்றும் பானுமதி, காளியம்மாள், தேவி, கனி, ராமசாமி, பால்ராஜ், உட்பட கழகத்தினர் பலர் கலந்துகொண்டனர். 

எம்.ஜி.ஆர் ரசிகரும், 32வது வட்ட கழக முன்னாள் செயலாளருமான பொ.ஜனார்த்தன பாண்டி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சத்யாலட்சுமணன், மிக்கேல், பொன்னம்பலம் ஆகியோர் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education




New Shape Tailors




Thoothukudi Business Directory