» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
செவ்வாய் 18, மார்ச் 2025 4:03:40 PM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் சந்தோஷ்குமார் (17). இவர் குறுக்கு சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய அக்காள் அன்னலட்சுமிக்கு திருமணமாகி கழுகுமலையில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகவன் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார்.
சந்தோஷ்குமார் தற்போது தாய் ஜெயலட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார். ஜெயலட்சுமி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே சந்தோஷ்குமார் யாருடனும் சரிவர பேசாமல் இருந்து வந்தார். கடந்த 15-ந்தேதி ஜெயலட்சுமி தனது உறவினர்களுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் சந்தோஷ்குமார் மட்டும் தனியாக இருந்தார்.
நேற்று முன்தினம் காலையில் பெண் வேடமணிந்து எடுத்த புகைப்படத்தை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த அன்னலட்சுமி, உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு சந்தோஷ்குமாரை கண்டித்தார். உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்குமாறும் கூறியுள்ளார். அவரும் உடனடியாக அந்த புகைப்படத்தை செல்போன் பதிவில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அன்று மாலை வரை செல்போனில் பேசாததால், சந்தேகம் அடைந்த அன்னலட்சுமி நேற்று முன்தினம் இரவு தம்பியிடம் செல்போனில் பேச முயன்றார். ஆனால் அவர் பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னலட்சுமி, அங்குள்ள உறவினர்களிடம் விவரத்தை எடுத்துச்சொல்லி, வீட்டிற்கு ெசன்று பார்க்குமாறு கூறினார். உடனடியாக அவரது உறவினர்களும் சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அங்கு சந்தோஷ்குமார் சேலை, ஜாக்கெட்டு அணிந்து பெண் வேடத்தில், மற்றொரு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் வேடமிட்டு செல்போனில் புகைப்படம் பதிவிட்டதை அக்காள் கண்டித்ததால் மனமுடைந்து இந்த விபரீத முடிவை மாணவன் எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
