» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 10 போ் கைது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

செவ்வாய் 18, மார்ச் 2025 9:23:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களையோ, பாடல்களையோ மற்றும் வசனங்களையோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் - மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 எதிரிகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாதி பிரச்சனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள், பாலியல் குற்றங்கள், சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையிலோ, பிற சாதியினரை புண்படுத்தும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory