» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் ராமதாஸ் நகர், ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் மோகன்ராஜ் (28), இவரது மனைவி வள்ளி (25), கணவன் மனைவி இருவரும் ரோட்டில் பிளாஸ்டிக், பேப்பர் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இன்று காலையில் கோரம்பள்ளம் பகுதியில் கழிவு பொருட்களை எடுத்து சாக்கு பையில் கட்டி வைத்துவிட்டு பெரிய நாயகிபுரத்தில் உள்ள குளத்தில் மோகன்ராஜ் குளிக்க சென்றாராம்.
அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்படவே தண்ணீரில் மூழ்கினார். இதில் சிறிது நேரத்தில் மனைவி கண் முன்னே அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 10 போ் கைது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
செவ்வாய் 18, மார்ச் 2025 9:23:24 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டு்ம் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகும்: மேலாண்மை இயக்குநர்
செவ்வாய் 18, மார்ச் 2025 9:17:00 AM (IST)

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை - உயா்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:11:19 AM (IST)

தூத்துக்குடியில் இளஞ்சிறாா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்: பெற்றோர் மீது வழக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:57:32 AM (IST)

மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:42:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)
