» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இளஞ்சிறாா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்: பெற்றோர் மீது வழக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:57:32 AM (IST)

தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டிய 2 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களது பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரே பைக்கில் வந்த 4 பேரை மடக்கி விசாரித்தனா். அந்த பைக்கை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து மத்தியபாகம் போலீஸில் ஒப்படைத்தனா்.
இதேபோன்று வி.இ. சாலையில் போக்குவரத்து போலீஸா் நடத்திய வாகன சோதனையின் போது, 15 வயது சிறுவன் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. அந்த பைக்கை பறிமுதல் செய்து தென்பாகம் போலீஸில் ஒப்படைத்தனா். இந்த இரு சம்பவங்களிலும் சிறுவா்களை மோட்டாா் சைக்கிள் ஓட்ட அனுமதி அளித்த பெற்றோரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலும் இருவருக்கும் மொத்தம் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்கள் ஓட்டினால் இதுபோல தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
குலசேகரன்பட்டினம் சமூக.ஆர்வலர்அ.பொ.சங்கரனார்நன்றிவணக்கம்Mar 18, 2025 - 02:21:03 PM | Posted IP 162.1*****
மவாட்டம்முழுவதுஇவ்வாறுகாவல்துறைகண்காணிப்பாளர்அவர்நடவடிக்கைஎடுக்குமாறுபணிவன்புடன்கேட்டுக்கொள்கின்றேன்.தூத்துக்குடியில்சிறார்கள்பைக்ஓட்டியதற்குநடவடிக்கைஎடுத்தமைக்குமனநிறைவுடன்நன்றியும்வணக்கத்தையும்தெரிவித்துக்கொள்கின்றேன்
மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்அவர்களுக்குகோடிவணக்கங்கள்...வாழ்த்துக்கள் தமிழ் மட்டுமே மைக்Mar 18, 2025 - 02:13:22 PM | Posted IP 162.1*****
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவது உறுதி : எஸ்.பி.சண்முக நாதன் பேச்சு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:09:55 PM (IST)

தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் பயிற்சி: டிஎம்பி பவுண்டேஷன் ஒப்பந்தம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:50:14 PM (IST)

மார்ச் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 3:55:13 PM (IST)

நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 3:23:26 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா
செவ்வாய் 18, மார்ச் 2025 3:16:49 PM (IST)

வெம்பூர் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 3:06:29 PM (IST)

Thoothukudi. K. Rathan 20 வது வார்டு காங்கிரஸ் தலைவர்Mar 18, 2025 - 04:21:09 PM | Posted IP 162.1*****