» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை நிலுவையில் இருந்த 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த எதிரிகள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை 689 எதிரிகளுக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரிகள் தொடர்ந்து ஆஜராகமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 10 போ் கைது: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
செவ்வாய் 18, மார்ச் 2025 9:23:24 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டு்ம் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகும்: மேலாண்மை இயக்குநர்
செவ்வாய் 18, மார்ச் 2025 9:17:00 AM (IST)

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை - உயா்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:11:19 AM (IST)

தூத்துக்குடியில் இளஞ்சிறாா்கள் ஓட்டிய 2 பைக் பறிமுதல்: பெற்றோர் மீது வழக்கு, ரூ.50 ஆயிரம் அபராதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:57:32 AM (IST)

மேல்மாந்தை பெத்தனாட்சியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:42:41 AM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)
