» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.த செல்லப் பாண்டியனிடம் கிறிஸ்தவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்த்தனையும் வழிபாடு செய்வது வழக்கம் இதையொட்டி சிலுவையை சுமந்தவாறு உள்ள இயேசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவர்கள் ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்யும் நாளாக புனித வெள்ளி விளங்குகிறது.
அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறை மாவட்ட அனைத்து மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரஸ்டன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான,சி. த செல்லப்பாண்டியன் அவர்களை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் பரிந்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட சி.த. செல்லப்பாண்டியன் நிச்சயமாக சென்னை சென்று தங்களது கோரிக்கை மனுவை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, தமிழக அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவும், இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக ஆதரவு அளிப்பதற்கு முன்னால் முதலர்வரிடம் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார். சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் தலைவர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:40:15 PM (IST)
