» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீயணைப்பு பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு

ஞாயிறு 16, மார்ச் 2025 4:32:51 PM (IST)



தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று பார்வையிட்டார் 

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள் மூலம் அணைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (16.03.2025) நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அலகு ஒன்று மற்றும் இரண்டில் இருக்கக்கூடிய கேபிள்களில் நேற்று இரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு அதை முழுமையாக அனைத்துள்ளார்கள். 

அலகு 1 மற்றும் 2ல் உள்ள கேபிள்களில் ஏற்பட்ட தீ அலகு 3 மற்றும் 4ல் பரவுவதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேபிள்களில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட பிறகும் ரொம்ப உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து தீயினுடைய துவாலைகள் இன்னமுமே வந்து கொண்டிருப்பதால் அதை அணைப்பதற்காக 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது தவிர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை தூத்துக்குடி அனல் மின் நிலையத்தினுடைய பயர் சேப்டி இன்ஜினியர் மற்றும் சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஆகிய அனைவரும் இணைந்து சில இடங்களை எல்லாம் உடைத்து புதிதாக வலி ஏற்படுத்திக் கொடுத்து எங்கு எல்லாம் தீயினுடைய தாக்கம் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடங்களில் தீயை அனைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். 

கூடுதல் உபகரணங்கள் வெளியிலிருந்து வரவழைத்து உள்ளோம். இது தவிர தண்ணீர் வழங்க கூடுதல் வாகனங்கள் தூத்துக்குடி மாநகராட்சி, துறைமுகம் ஆகியவற்றிலிருந்து கேட்டு வாங்கியுள்ளோம். இப்போதைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. எந்த ஒரு உயிர் பலியும் இல்லை. அலகு 1 மற்றும் 2 முழுமையாக மூடப்பட்டுள்ளது. அலகு 3 மற்றும் 4 பாதுகாப்பாக உள்ளது. மின்சார உற்பத்தி தயார் செய்யப்பட்டு வருகிறது. 

அலகு 1 மற்றும் 2ல் இருக்கக்கூடிய தீயினை அனைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. கடைசியாக ஓரிரு இடங்களில் புகை வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே சென்று அணைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்தப் பணிகளை முடித்து பாதுகாப்பான ஒரு நிலைக்கு சென்றிடலாம்.



தொடர்ந்து, மதுரை மண்டலத்தில் இருக்கக்கூடிய முக்கியமான தீயனைப்பு நிலையங்களில் இருந்து 10 தீயனைக்கும் ஊர்திகள் வரவழைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர கூடுதலாக வர வைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது இருக்கும் வாகனங்கள் போதுமானது. அனல் மின்நிலைய ஊழியர்கள் தற்போது உள்ளே செல்வதற்கு பாதைகள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் தீயணைப்பு வீரர்களும் பணியாற்றி வருகிறார்கள். 

நேற்று இரவு அதிகமான புகை இருந்த காரணத்தினால் அங்கு தீயணைக்க சென்ற 2 தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது நலமாக உள்ளனர் என ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார். ஆய்வின்போது தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory