» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஓம்குமார் (48), இவர் அங்கு பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார் இவர் தனது குடும்பத்தினர்கள் 12 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றாராம்.
இரண்டு மணி நேரமாக வரிசையில் நின்ற அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:40:15 PM (IST)
