» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:40:15 PM (IST)

தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா 85வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு மக்கள் நலப்பணிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 85வது அவதார பெருமங்கல விழா தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் வைத்து நடைபெற்றது. குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு வேள்விபூஜையை சக்திபீட மகளிர் அணி தலைவி பத்மாவதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இயற்கை சீற்றம் தணியவும், மழைவளம் வேண்டியும் சங்கல்பம் செய்து 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி ஓம் சக்தி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் பங்காரு அடிகளார் அம்மா ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நலப்பணி விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் தலைமை வகித்து ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்து பிழைக்க தையல் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான் கருவி, இட்லி பாத்திரம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சைக்கிள் மற்றும் 150 பெண்களுக்கு சேலை, ஆடவர்களுக்கு வேஷ்டி துண்டு ஆகிய நலத்திட்டங்களை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, விஜயலெட்சுமி, காஞ்சனா, மாரியப்பன், திருவிக நகர் சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, நாகலாபுரம் கிருஷ்ணநீலா, தளவாய்புரம் ராஜ், கழுகுமலை அழகர், இந்திராநகர் பேச்சியம்மாள், அண்ணாநகர் சிவஞானம், லோகியா நகர் முருகன், சக்திபீட பொறுப்பாளர்கள் வேல்ராஜ், மந்திரம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் யசோதா, பச்சியம்மாள், செல்வி, அகிலா, முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
