» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

தூத்துக்குடியில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சாலையில் பள்ளத்தை தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு, நேற்று அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்தியபாகம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வள்ளிநாயகம் அப்பகுதியில் இருந்த மணலை மூடையில் அள்ளி பள்ளத்தில் கொட்டி சரி செய்தார்.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்காமல் இருப்பதற்காக தாமாக முன்வந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்ட மேற்படி போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:39:32 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
