» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:39:32 AM (IST)

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை ஊருக்கு வட புறம் உள்ள கடற்கரையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட 30 கிலோ வீதம் 82 மூடைகளில் இருந்த பீடி இலைகளை பறிமுதல் செய்துளள்னர். இதனை கடத்த முயன்ற மர்ம நபர்கள் படகுடன் தப்பித்துச் சென்று விட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய 2 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றபட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். பீடி இலைகள் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
