» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது போதையில் டார்ச்சர்: கணவனை கட்டையால் தாக்கிய மனைவி கைது!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:04:44 PM (IST)
தூத்துக்குடியில் மது போதையில் டார்ச்சர் செய்த கணவனை உருட்டுகட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ரவீந்திரன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாலம்மாள் (53), இந்த தம்பதிக்கு 3மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இதற்கிடையே ரவீந்திரன் தினசரி மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி பாலம்மாளிடம் தகராறு செய்வாராம். மேலும் அவருக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் மதுபோதையில் வந்த ரவீந்திரன் மனைவியிடம் டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி பாலம்மாள் வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் அவரை சரமரியாக தாக்கினாராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து பாலம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நீக்கம்: என்.ஆர். தனபாலன் அறிவிப்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:35:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:20:02 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர் திடீர் மரணம்!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:13:04 PM (IST)

சாலையில் பள்ளத்தை சரிசெய்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு!
ஞாயிறு 16, மார்ச் 2025 8:08:41 PM (IST)

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவதார பெருமங்கல விழா : மக்கள் நலப்பணிகள் வழங்கல்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:40:15 PM (IST)
