» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!
வெள்ளி 14, மார்ச் 2025 10:25:53 AM (IST)

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்முருகன் கோவில் வளாகத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன், செவ்வாய் கோள்களை பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது. இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த பக்தர்கள் வானில் தெரிந்த பௌர்ணமி நிலா மற்றும் வியாழன், செவ்வாய் கோள்களை பார்வையிட்டு வியந்தனர். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் வானவியல் குறித்தும் கோள்கள் குறித்து விளக்கி கூறினர்.
இதில் கோவில்பட்டி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் குடும்பத்துடன் வருகை தந்து டெலஸ்கோப்பில் நிலாவினை பார்வையிட்டார், இதில் கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் அனைவரும் டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலா, வியாழன் ,செவ்வாய்,கோள்களை பார்வையிட்டு வியந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்
வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)
