» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் மார்ச் 31க்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் 31.03.2025 க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணையவழியில் செலுத்தி உரிய கணினி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 403 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு அறிவிப்பு என்னவென்றால், தாங்கள் தங்கள் கிராம ஊராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி (வீட்டு வரி) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242  இன் படி செலுத்த கடமைப்பட்டுள்ளீர்கள். எனவே சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உட்பட அனைத்து வரியினங்களையும் (31.03.2025)க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிலுவையின்றி இணைய வழியில் செலுத்தி உரிய கணினி இரசீது பெற்றுக்கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory