» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தற்போது பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவியில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை வைத்து போலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தி தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் நலன் கருதி மேற்படி சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும் இந்த சைபர் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் குற்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory