» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொலை தொடர்பு பொது மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல். சேவையை பாராட்டி பேசினார். அதோடு ஆன்லைனில் பணம் செலுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
உதவி பொது மேலாளர்கள் ஆறுமுகசாமி மற்றும் சாந்தி ஆகியோர் பி.எஸ்.என்.எல். சேவை குறித்து பேசினர். துணை பொது மேலாளர் லிங்க பாஸ்கர் பி.எஸ்.என்.எல். திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலர் சேர்மதுரை வரவேற்புரை ஆற்றினார். நேதாஜி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளை பி.எஸ்.என்.எல். அலுவலர் எஸ்கலின் தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான தொலை தொடர்பு துறை நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா
சனி 15, மார்ச் 2025 10:13:39 AM (IST)

இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது: துக்க வீட்டில் கைவரிசை!
சனி 15, மார்ச் 2025 8:52:36 AM (IST)

விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சனி 15, மார்ச் 2025 8:45:40 AM (IST)

தமிழக பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பட்டியல்!
சனி 15, மார்ச் 2025 8:41:34 AM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு!
சனி 15, மார்ச் 2025 8:29:49 AM (IST)

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30 ஆடுகள் பலி
சனி 15, மார்ச் 2025 8:27:26 AM (IST)
