» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த கனம் சுரேஷ் இன்று (14.03.2025) குற்றவாளியான மாரிமுத்துக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா அவர்களையும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டார் நிறுவனத்தில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா
சனி 15, மார்ச் 2025 10:13:39 AM (IST)

இறந்த பெண்ணின் உடலில் இருந்த நகை திருடிய வாலிபர் கைது: துக்க வீட்டில் கைவரிசை!
சனி 15, மார்ச் 2025 8:52:36 AM (IST)

விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த தடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
சனி 15, மார்ச் 2025 8:45:40 AM (IST)

தமிழக பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பட்டியல்!
சனி 15, மார்ச் 2025 8:41:34 AM (IST)

தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய விலாங்கு மீன் இனம் கண்டுபிடிப்பு!
சனி 15, மார்ச் 2025 8:29:49 AM (IST)

வெறிநாய்கள் கடித்து குதறியதில் 30 ஆடுகள் பலி
சனி 15, மார்ச் 2025 8:27:26 AM (IST)
