» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்

வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)



கலைஞர் வழியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா் என அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பாக மகளிர் தின விழா பெரிய செல்வம் நகர் இசேவை மைதானத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாளர் ராதா தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் குழுக்களுக்கு பாிசுகள் வழங்கி பேசுகையில் "கலைஞர் ஆட்சியில் 1989ல் சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் முன்னேற்றதிற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாறிய பின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முடங்கி கிடந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெண்களுக்கான விடியல் பயணத்திற்கு முதல் கையெழுத்திட்டாா். 

பின்னா் மகளிர் உாிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூாி படிப்பிற்கு பெண்களுக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓவ்வொரு சுய உதவி குழுக்களுக்கும் 20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு சொந்தமாக தொழில் செய்வதற்கும் அவர்களது வாழ்வில் பொருளாதார நிலை முன்னேற்றம் அடைவதற்கும் உதவியாக இருந்து வருகிறது. இப்படி பல்வேறு வகையில் பெண்கள் நலன் தான் முக்கியம் என கருதி தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறாா். ஓரு குடும்பத்தில் பெண் படித்திருந்தால் அவரை சுற்றியுள்ள சமூகம் மட்டுமின்றி குடும்பமே வளர்ச்சியடையும் வரும் காலங்களிலும் பெண்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வழங்கி நல்லாட்சி நடத்தும் அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினாா்.

விழாவில் சமுகநலத்துறை செலின்ஜார்ஜ், கூட்டுறவு வங்கி சுபாஸ்டெல்லா, மாப்பிள்ளையூரணி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் டிக்சன், இந்தியன் ஓவா்ல்சிஸ் வங்கி மேலாளர் செந்தில்குமார், காவல்துறை ஆய்வாளர் சங்கரலிங்கம், ஆசிரியர் எஸ்கலின், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனா். விழாவில் நடனம், நாடகம். கோலாட்டம். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகளிர் கூட்டமைப்பு தலைவி பிரேமா நன்றியுரையாற்றினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory