» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)
கீழ ஈரால் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தூத்துக்குடி - மதுரை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே கீழ ஈரால் கிராமத்தில் ரோட்டை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கீழ ஈரால் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி - மதுரை ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் போக்குவரத்து சீரானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்
வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)
