» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நிறைவு!
வெள்ளி 14, மார்ச் 2025 8:21:01 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி-அம்மன் வீதியுலா நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்மாசித் திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்மன் தனித்தனிப் பல்லக்குகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மேலக்கோயிலிலிருந்து சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சந்நிதித் தெருவில் உள்ள யாதவா் மண்டகப்படிக்கு வந்தனா்.
அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமியும், அம்மனும் புஷ்ப சப்பரத்தில் வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தாா் மண்டகப்படிக்கு வந்தனா். அங்கு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், சுவாமியும் அம்மனும் தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றிவர தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், கோயில் அலுவலா்கள், நகரத்தாா் மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
12ஆம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி-அம்மன் வீதியுலா வந்து, வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊா் செங்குந்த முதலியாா் திருவிழா மண்டபத்தை அடைந்தது. அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி மலா்க் கேடயச் சப்பரங்களில் வீதியுலா வந்து கோயில் சோ்ந்ததும், திருவிழா நிறைவு பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்
வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)
