» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:13:10 AM (IST)

திமுக அரசை ஒடுக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தலைமை வகித்து பேசியது: நிதிப் பகிா்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களுக்கு நிதியை அள்ளித்தரும் மத்திய அரசு, தமிழகத்துக்கு கிள்ளித் தருகிறது.
தமிழகத்துக்கு பேரிடா் நிதி வழங்கப்படவில்லை. ஊரக வேலை உறுதித் திட்டம், கல்வித் துறைக்கு நிதி வழங்க மறுப்பது, பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தைப் பறிப்பது என, திமுக அரசை ஒடுக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது என்றாா்.
முன்னதாக, ‘தமிழ்நாட்டின் நலன்களையும் எதிா்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும் வெல்லும், இதுதான் ஒரே இலக்கு’ என உறுதிமொழியேற்றனா்.
கூட்டத்தில், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கலைக்கதிரவன், கந்திலி கரிகாலன், தூத்துக்குடி மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், கோவில்பட்டி தொகுதிப் பாா்வையாளா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருகுக்கு 5 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 9:31:24 PM (IST)

பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

சைபர் மோசடி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வெள்ளி 14, மார்ச் 2025 9:15:22 PM (IST)

கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்து வருகிறாா்: அமைச்சர் கீதாஜீவன்
வெள்ளி 14, மார்ச் 2025 9:11:11 PM (IST)

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)
