» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகா் வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் : மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!

புதன் 22, ஜனவரி 2025 8:59:45 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினாா்.

முகாமை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 7 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. 

அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே பெறப்பட்ட  மனுக்களின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.. பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பிப்ரவாி மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் சாி செய்து தரப்படும். முதலமைச்சர் உத்தரவு படி பொங்கலையொட்டி அனைத்து பூங்காக்களும் பொதுமக்களின் கோாிக்கை படி அனைத்து வசதிகளும் சாிசெய்து கொடுக்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளில் குறிப்பாக முத்துநகர் கடற்கரை, ரோச்பூங்கா உள்பட பலர் பூங்காக்களுக்கு ெசன்று வந்தனர். என்று கூறினாா்.

பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றக்கொண்ட பின்னர் கூறுகையில் 16 17 18 மற்றும் 2, 3, வார்டுகளில் காலியிடங்களில் மழை நீர் தேங்கியது அதையும் முறைப்படுத்தி வௌியேற்றியுள்ளோம். இன்னும் 10 நாட்களில் முழுமையடைந்து எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்வு வராமல் பாா்த்துகொள்வோம். கால்நடைகள் சுற்றிதிரிவது குறித்தும் இனையதளத்தில் வரும் புகாா்கள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கால்நடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. 

இருப்பினும் சிலர் திாியவிடுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது போன்ற தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டு இனப்பெருக்கத்தை தடைசெய்யப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கேற்ப பல்வேறு பணிகைள மேற்கொண்டு வருகிறோம். பூபால்ராயபுரம் ரவுண்டானா பகுதியில் முதியவர்கள் சாய்தள இருக்கையில் அமா்ந்து மகிழ்ச்சியுடன் செல்வதற்கேற்ப பூங்கா கட்டமைப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக விடுபட்ட சிறிய மற்றும் சந்துக்கள் பகுதியில் சாலைகள் பேவர் பிளாக் கற்கள் முறைப்படுத்தி செயல்படுத்தப்படும் எல்லாவற்றிற்கும் மேலாக மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் ஓத்துழைப்ப அவசியம் என்று கூறினாா் பின்னா் மனு அளித்த சிறிது நேரத்தில் இரண்டு பேருக்கு இறப்பு சான்றிதழும் ஓருவருக்கு பிறப்பு சான்றிதழும் உடனடியாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர்ரெங்கநாதன், திட்ட உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ெஜபராஜ், நகா்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர் ெநடுமாறன். இளநிலை பொறியாளர் பாண்டி, குழாய் ஆய்வாளர் மாாியப்பன்,  கவுன்சிலர்கள் தனலட்சுமி, மாியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், எடின்டா, வட்ட செயலாளர் கதிரேசன், பொன்ராஜ், பகுதி சபா உறுப்பினர் ஆா்தர்மச்சாது, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், முன்னாள் கவுன்சிலர் பொியசாமி, மாநகர இலக்கிய அணி துணைத்தலைவர் நலம்ராஜேந்திரன், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory