» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிவராத்திரியை முன்னிட்டு மாறுவேடப் போட்டி: குழந்தைகள் பங்கேற்கலாம்!
புதன் 22, ஜனவரி 2025 5:34:19 PM (IST)
தூத்துக்குடியில் சிவராத்திரியை முன்னிட்டு வருகிற பிப்.26ஆம் தேதி குழந்தைகளுக்கான மாறு வேடப்போட்டி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் பிசித்திபெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 26.02.2025 புதன்கிழமை குழந்தைகளுக்கான மாறு வேடப்போட்டி (10 வயதுக்குற்பட்டவர்கள்) மற்றும் தேவாரப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் குழந்தைகள் பெயரை முன்பதிவு செய்யுமாறு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.