» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: சப் கலெக்டர் சத்யா தொடங்கி வைத்தார்

புதன் 22, ஜனவரி 2025 5:23:45 PM (IST)



நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறையின் குறுகிய கால பயிற்சியை தூத்துக்குடி சப்- கலெக்டர் (பொறுப்பு) சத்யா தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக பல்வேறு துறைகளில் வேலை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. மேலும் தனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் 4.0 தொழில்நுட்பமைய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி குறுகிய கால திறன் பயிற்சி மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களிடையே தொழில்சார் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் விதமாக செயலாற்றி வருகிறது.

அதன்படி, நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், உதவித் தொகையுடன் கூடிய குறுகிய கால தையல் பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி முதல்வர்ஜான்சன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார்‌. தொழிற் பயிற்சி மைய மேலாளர் டேனியல் பள்ளி நான் முதல்வன் திட்ட அலுவலர் பிரவின், ஆசிரியர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சப்- கலெக்டர் (பயிற்சி) சத்யா கலந்து கொண்டு தமிழக திறன் மேம்பாட்டுத் துறையின் 4.0 தொழில்நுட்ப குறுகிய கால திறன் பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசினார். விழாவில் ஆர்ட் தொழிற் பள்ளி அலுவலர் அனி மேரி சப் கலெக்டர் (பயிற்சி) சத்யாவிற்கு பொன்னாடை அணிவித்தார். இவ்விழாவில் ஆர்ட் தொழிற் பள்ளி தலைமை கணக்காளர் ஆசீர் பெஞ்சமின், ஆசிரியர்கள் நவமணி, ஆல்வின், எட்வர்ட், முன்னாள் மேலாளர் அகஸ்டின், ஜெஸ்வின் மற்றும் குறுகிய கால பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சப்- கலெக்டர் (பொறுப்பு) சத்யா நாசரேத் ஆர்ட் தொழிற் பயிற்சி மையத்தின் உற்பத்தி பிரிவு தயாரிப்புகளான இஸ்ரோவின் ககன்யான் திட்ட ராக்கெட் மற்றும் சேட்டிலைட்டிற்கான உதிரி பாகங்களைப் பார்வையிட்டார். பின்னர் ஆர்ட் தொழிற் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே கலந்துரையாடினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் எட்வர்ட் கண்ணப்பா ஆலோசனையின் பேரில் பள்ளி முதல்வர் ஜான்சன், தையல் பயிற்சி ஆசிரியர் பொன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory