» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை!

புதன் 22, ஜனவரி 2025 5:43:39 PM (IST)

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நீர் பாட்டில்களின் விற்பனை நடைபெற்று  வருகிறது.

இது தொர்பாக தூத்துக்குடி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," கங்கோத்திரி மலையில் இருந்து வருகின்ற கங்கை நதி நீரை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை செய்து வருகிறது. 250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு இந்த கங்கை நீர் பாட்டில்களின் விற்பனை தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தலைமை  அஞ்சலகங்களில்  நடைபெற்று  வருகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வருகின்ற தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியிலுள்ள அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் தனி ஸ்டால் அமைக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory