» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பத்திரிக்கையாளர் நல வாரியத்தை கலைக்க வேண்டும் : டி.யூ.ஜே. தீர்மானம்
புதன் 22, ஜனவரி 2025 8:28:20 PM (IST)
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பத்திரிக்கையாளர் நல வாரியத்தை கலைக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் நடந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வடக்கு ரதவீதி பசும்பொன் தேவர் மகாலில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் சேவியர், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார், புதுச்சேரி மாநில தலைவர் மதி மகாராஜா, தூத்துக்குடி மாந்கர் மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்தாலியன் பேக்கரி நிர்வாக இயக்குனர் பாத்திமா, சங்க கொடியை ஏற்றி வைத்தார். தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ் வரவேற்றார். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், ஷீபா நிக்சன், இன்சூரன்ஸ் கௌரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மறைந்த பத்திரிகையாளர் நிக்சன் படத்தை சமூக நீதிப் பேரவை பொதுச் செயலாளரும், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் காயல் அகமது சாகிப் திறந்து வைத்து மலர் தூவினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மறைந்த நிக்சன் குடும்பத்தினருக்கு அதிமுக கட்சி சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து தீர்மானங்களை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் வாசித்தார். அப்போது, மறைந்த உறுப்பினர்கள் நிக்சன், ஜீவா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை போல பத்திரிக்கையாளர் உரிமைதொகை அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் ஓய்வூதியத்தை மற்ற மாநிலங்களில் வழங்குவது போல ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக அமைக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தாலுகா செய்தியாளர்களுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம் உள்ளிட்ட கடற்கரை பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா பத்திரிக்கையாளர்களுக்கு பயன்படாத தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பத்திரிக்கையாளர் நல வாரியத்தை கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த பத்திரிக்கையாளர்கள் கிருஷ்ணன், குமாரவேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கூட்டத்தில், பத்திரிக்கையாளர் சங்க மாநில துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், பிரபாகரன், திண்டுக்கல் ராமகிருஷ்ணன், குமரி மாவட்டம் நந்தகோபால், தென்காசி பாவூர் ராஜேந்திரன், நெல்லை பூவையா, மாநகர் மாவட்ட பொருளாளர் ஞானதுரை, துணைத்தலைவர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் பொன் பலவேசராஜ், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் வேலாயுதபெருமாள், சிறுகுறு வியாபாரிகள் சங்க தலைவர் மாரியப்பன், அதிமுக பிரமுகர்கள் விஜயகுமார், மனோகரன், மகாலிங்கம், சுரேஷ்பாபு, கண் தான இயக்கம் சுந்தர், பழக்கடை திருப்பதி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புறநகர் மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.