» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் யூரியா பதுக்கிய வழக்கில் 2 போ் கைது!
புதன் 22, ஜனவரி 2025 8:33:48 AM (IST)
கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் யூரியா மூட்டைகள் பதுக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் ரவிக்குமாா், ஸ்டீபன் ராஜ் தலைமையில் தனிப்படையினா் ஆய்வு செய்த போது, அங்கு தலா 45 கிலோ எடை கொண்ட சுமாா் 600 மூட்டை யூரியா வைத்திருப்பது தெரிய வந்தது. கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன், கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநா் மணிகண்டன், உதவி இயக்குநா் (தர கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை அலுவலா் (உர ஆய்வாளா்) காயத்ரி ஆகியோா் அந்தக் கிடங்கை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
இது குறித்து உர ஆய்வாளா் காயத்ரி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இவ் வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் கிழக்கு பாண்டவா்மங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்த கேத்ரின் ராஜ் மகன் ராஜ்குமாா் (35), கோவில்பட்டி ஜோதி நகா் 4 ஆவது தெருவை சோ்ந்த சின்னமணி மகன் கணேசன் (52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.
யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ள ஜோதி நகரைச் சோ்ந்த பொன்வேல் மகன் வள்ளுவன் மற்றும் இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனா்.