» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:07:32 AM (IST)
ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் வாரந்தோறும் செவ்வாய், சனி ஆகிய நாள்களில் ஆட்டு சந்தை கூடும். நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திசையன்விளை, உடன்குடி, பரமன்குறிச்சி, நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனா். சந்தையில் தோராயமாக 10 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பல வகையான ஆடுகள் ரூ.1 கோடி வரையில் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.