» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்கற்குளம் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
சனி 11, ஜனவரி 2025 8:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் கண்காணிப்பு திரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதிகளில் மொத்தம் 24 சிசிடிவி கேமராக்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு திரையை புதிதாக நிறுவியுள்ளனர். மேற்படி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதன் கண்காணிப்பு திரையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (11.01.2025) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிசிடிவி கேமரா பொருத்துவதின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சிசிடிவி கேமராக்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்த ஆழ்வார்கற்குளம் இளைஞர்களையும் வெகுவாக பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை உட்பட காவல்துறையினர் மற்றும் ஊர் இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)










