» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழா : ஜன.13ஆம் ஆனந்த ஆருத்ரா தரிசனம்!
சனி 11, ஜனவரி 2025 4:47:21 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவில் வருகிற 13ஆம் தேதி ஆனந்த ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்சியாக வருகிற 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு காலசந்தி, 6 மணிக்கு ஸ்ரீஆடவல்லான் ஆனந்த ஆருத்ரா தரிசனம், காலை 10 மணிக்கு ஸ்ரீநடராஜர் திருவீதி உலா வருதல், பகல் 12 மணிக்கு நடராஜர் சேர்க்கை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.