» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்வாங்க அலைமோதிய மக்கள் : மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 12, ஜனவரி 2025 9:11:59 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீன் விலை குறைந்து காணப்படும். ஆனால், நேற்று என்பதால் விலை பெரியளவில் குறையவில்லை. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரைதிரும்பினா். இதனால், திரேஸ்புரம் ஏலக் கூடத்தில் மீன்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
மீன்கள் வாங்குவதற்காக கேரள வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விலை ஓரளவு உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ. 800, விளைமீன், பாறை, ஊளி ஆகியவை ரூ. 500 - ரூ. 600 வரை, நண்டு கிலோ ரூ. 500, சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 - ரூ. 2 ஆயிரம் வரை என விற்பனையாகின. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.