» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வருடன் அமைச்சர் கீதாஜீவன் சந்திப்பு

சனி 11, ஜனவரி 2025 8:04:08 PM (IST)



தமிழக முதல்வர் மு.க. ஸடாலினை அமைச்சர கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் இன்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆளுனர் உரை மீதான விவாத்திற்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் பதிலுரை அளிக்க உள்ளதை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


மக்கள் கருத்து

தேடி வந்த செய்திJan 12, 2025 - 12:05:22 PM | Posted IP 172.7*****

பாத்திமா பாபு செய்தி பற்றி தெரியுமா?? சிரிப்பா வரும்ல 😁😁😁

திருட்டு திமுகJan 11, 2025 - 11:17:53 PM | Posted IP 162.1*****

டோட்டலா வேஸ்ட் மாடல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory