» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதை: தமிழக அரசுக்கு சி.த.செல்லப்பாண்டியன் கண்டனம்!
சனி 11, ஜனவரி 2025 4:51:10 PM (IST)
தூத்துக்குடி - மதுரை புதிய ரயில் பாதையை வேண்டாம் என்று கூறியதாக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதியதாக ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு முன்வந்து கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இத்திட்டத்தை வேண்டாம் என்று கூறி எழுத்துப்பூர்வமான கடிதம் எழுதி அனுப்பிய தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் என அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.