» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்கேன் எடுக்க டிஜிட்டல் முறையில் கட்டணம் : மீண்டும் பழைய முறையை செயல்படுத்த கோரிக்கை!
வியாழன் 2, ஜனவரி 2025 9:58:53 PM (IST)
அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ஆன்லைன் முறைக்கு பதிலாக ரொக்கமாக கட்டணம் செலுத்துமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதற்கு ரொக்கமாக பணம் கட்டி வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்துவதற்காக பணம் செலுத்தும் இயந்திரங்களும் ஸ்கேன் மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதற்கு ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும். ஆனால், இது அவசர தேவை என்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ரொக்கமாக பணத்தையும் ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் சங்கர் எக்ஸ் தளம் வாயிலாக தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.