» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதலூரில் அபாய மின்கம்பம் : சீரமைக்க கோரிக்கை!!
சனி 4, ஜனவரி 2025 8:19:26 PM (IST)
முதலூரில் அபாய நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் தர்மாபுரி பகுதியில் பிரதான சாலையோரம் குடியிருப்பு வீடுகள் அருகில் பழமையான மின்கம்பம் உள்ளது. இந்த கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபடியால் அதில் கீறல் விழுந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் அருகில் இரண்டு அல்வா கடை மற்றும் குழந்தைகள் விளையாடும் பூங்காவும் உள்ளது.
இந்த மின் கம்பம் அருகில் மக்கள் அதிகமாக காணப்படுகிறது. பராமரிப்பு இல்லாத இந்த மின்கம்பம் சரிந்து விபத்து ஏற்படுத்தினால் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இந்த அபாய மின்கம்பத்தை மாற்றி விபத்து நிகழ உள்ளதை தடு¢க்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.