» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 6, ஜனவரி 2025 8:05:07 PM (IST)
தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டை பூதம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சதீஷ்குமார் (25), சாயர்புரம் தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமார் (24), முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சேர்மபாண்டி (29) மற்றும் குரும்பூர் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த சேதுபதி மகன் நிஷாந்த் (எ) சடையசூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (06.01.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.