» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:38:53 PM (IST)
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யபட்டதை கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்கள் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யபட்டதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் நாசரேத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் சத்திவேலன் தலைமையில் நகர தலைவர் ராஜசெல்வம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர்கள் அருணாச்சலம், ஜெய்ராம், பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிசந்தர், ஆனந்த், நகரபொதுச்செயலாளர் சங்கர், நகரசெயலாளர், அஜித், பாஜக நகரதலைவர் சாரதி, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பாஜக கிளை தலைவர் கார்த்தி உள்பட ஏராளமான இந்து முன்னணி, பாஜக பொறுப்பாளர்கள் கே. வி. கே சாமி சிலை அருகில் திரன்டனர் நாசரேத் காவல்துறையினர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முன் வந்தனர் காவல் துறை பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.