» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
புதன் 8, ஜனவரி 2025 10:24:56 AM (IST)
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் அலங்காரம் மகன் தனுஷ் (30) மீனவரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனையில் மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மன வேதனைஅடைந்த தனுஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.