» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் திருட்டு: வாலிபர் கைது!
புதன் 8, ஜனவரி 2025 12:58:28 PM (IST)
தூத்துக்குடியில் பைக் திருட்டு, செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் நிகிலேஷ் நகரைச் சேர்ந்தவர் மோகன் மகன் சுரேஷ் (30), கடந்த 5ம் தேதி இவர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது பைக் திருடுபோய்விட்டது. இது குறித்து தருவைகுளம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த சேர்மராஜ் மகன் சக்திவேல் (25) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர் தூத்துக்குடி - மதுரை ரோடு டோல்கேட் அருகே தூத்துக்குடி டுவிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ரவிக்குமார் (45) என்பவரிடம் செல்போன் பறித்து சென்றதும் தெரியவந்தது. ஏற்கனவே இது சம்பந்தமாக ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகளிலும் சக்தி வேலுவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் பைக், மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.